மறைவுகள் இன்றி வாழ்ந்த வாழ்க்கையில்
இன்று மறைவுகளே வாழ்க்கையாய்...
உண்மையின் நேர்காணல் எப்போது நேரும்?
கனவுகளில் வாழ்க்கை சந்தோஷங்களை கண்டு
கனவுகள் கலைந்தால்
விழித்துக் கொண்டதாய் அர்த்தம் கொண்டேன்
விடியல் கண்டதாய் அர்த்தம் கொண்டேன்
வாழ்க்கை என்னும் நிஜத்தில் பிரயாணப் படுவதாய்
பூரித்துப் போனேன்
நிஜத்தின் நிழலைக் கண்டே என் எதிர்கால நிகழ்வுகள்
புரிந்ததாய் புரிந்து கொண்டேன்
நிஜத்தின் நிஜத்தைக் கண்ட பின்பே
கனவுகளின் உண்மை புரிந்தேன்
இன்றோ...
கனவுகளுக்கு ஏங்கி கண்களை கோர்க்கிறேன்
நித்திரையும் இல்லை
கனவுகளும் இல்லை!!!
1 comment:
மறைவிடங்கள் எல்லாம் சிறைச்சாலைகள்.
ஏமாற்றங்கள் பொய் பேசும், நம்பாதே.
பிறருக்கு நம்மை அடிமைகளாக்கும்,
நடந்ததை சுட்டிக்காட்டி தேவையில்லாமல் வெட்கப்பட வைக்கும்.
பிறரின் பேராசைகள் உன் கனவுகளை கொன்று போடலாம்.
உன் கனவுகளின் ஆழத்தை உணரு,
அதன் மதிப்பு உன் பிறப்பு, திரும்ப கிடைக்காது
Post a Comment