என்னை என்னுளே அடையாளம் கண்டவர்கள்
என் நன்றி கடனாய்
என் மலரும் நினைவுகளாய்
இதோ உங்கள் முன் என் வரிகள்!
அப்பா
திருட்டுத்தனமாய் உங்கள் கவிதைகளை நேசித்திருகிறேன்
உங்கள் கனவுகளில் குடிபுகுந்துள்ளேன்
உங்கள் சிந்தனை சிறகுகளில் சிறிது இடம் எடுத்துக் கொண்டேன்!
என்னுடைய முதல் உந்துதல் தாம் தான்!
உலகில் அவரவர்க்கு கவி எழுத தூண்டுதலாய்
ஆயிரமாயிரம் கவிஞர் இருப்பர்
எனக்கோ
எனக்கு இந்த உலகை அடையாளம் காட்டியவர்
என்னை எனக்கே அடையாளம் காட்டினார்!!!
உங்களை பற்றி அனைத்தும் அறிந்த நான்
நீங்கள் எழுத நிறுத்தியதன் காரணம் மட்டும் ஏனோ அறியேன்!
உமக்கே தெரியாமல் உம்மை என் ஆசானாய் ஏற்றுக் கொண்டேன்
உலகமறியா அவ்வயதில் புவியனைத்தும் தெரிந்து கொள்ள
என் முதல் திறவுகோல் உங்கள் கவிதை என்னும்
கிறுக்கல்கள் தான்!
கிறுக்கல்கள்...
இது சரியான வார்த்தையல்ல
அது
உனது வாழ்க்கை பிரயாணங்கள்!
நீர் வாழ்ந்த இளமை காலங்கள்
உமக்கு நினைவுள்ளதா நான் அறியேன்
நீர் வாழ்ந்த ஒவ்வொரு நொடியும்
நானும் வாழ பழகிக் கொண்டேன்
உமது கவிச் சிறகுகளில் பிரயாணப் பட்டு
உமது வரிகளால் நானும் வானுலகில் மிதக்க கற்றுக் கொண்டேன்!
உமக்கான ஒவ்வொரு ஆசையையும்
உமக்கான ஒவ்வொரு கனவையும்
எனதாக்கி கொண்டேன்!
உமது முடிவுற்ற எழுத்துக்களின் ஆரம்பமாய்
என்னை நினைத்து எழுதக் கற்றுக் கொண்டேன்!
நீர் முடிந்ததாய் என்னும் எழுத்துக்கள்
முடியாமல் என் மூலம் வலம் வந்து கொண்டிருக்கும்!!!
என் எழுத்துகளின் முடிவு
என் சந்ததியின் எழுத்துக்களின் ஆரம்பமாய் திகழும்!!!
1 comment:
ரொம்ப நல்லா இருக்கு,
Post a Comment