நிழலில் நிஜத்தையும்
நிஜத்தில் நிழலையும்
சரியில் தவறையும்
தவறில் சரியையும்
தேடும் பேதை பெண் நான்.
சிலருக்கு எனது தேடல்
வேடிக்கையாயிருக்கும்
பலருக்கு எனது தேடல்
விதண்டாவாதமாய் தோன்றும்
எது எப்படியோ...
என்னுள் எனது தேடல்
என்றுமே சலித்துப்போனதில்லை!!!
உண்மையில் சிறு பொய்யுண்டு
பொய்யிலும் சிறு உண்மையுண்டு
வாழ்க்கை என்ற நிஜத்தில்
என்னுள் நானே நிழலானேன்
எப்போது நிஜமாகப்போகிறேன்?
நான் நிஜமானால்
என் வாழ்க்கை நிழலாகுமா?
என் வாழ்க்கை நிழலானால்
நான் நானே தானா?.
...???
1 comment:
பூரணி, இவள்
தனிமை விரும்பி
கேள்வியின் நாயகி
கனவுகளின் தோழி
கற்பனையின் காதலி
குமரியின் வடிவம்
குழந்தையின் உள்ளம்
அறிவில் கலைமகள் அம்சம்
கோபத்தில் காளியின் வம்சம்
ஆருயிர் தோழியாக அன்னை
தங்கையின் உருவில் இன்னொரு அன்னை
உள்ளுக்குள் கண்ணீர் வடிப்பாள்
வெளியில் பொய்யாக சிரிப்பாள்
இது இவளுக்கு கை தேர்ந்த கலை
யாரிடம் கற்றாள் இதை
பெண்ணே இதுவும் ஒரு நாள் கடந்து போகும்
உன் வாழ்வில் மீண்டும் வசந்தம் வரும்
இப்படிக்கு,
நீ வாழ வாழ்த்தும் ஓர் இதயம்
Post a Comment