Tuesday, February 12, 2008

என்னை நேசித்த முதல் நொடி...

எவருக்காவது தம்மை நேசித்த
முதல் நொடி நினைவிருக்கிறதா?

நான் அறிவேன்
என்னை நான் நேசிக்க தொடங்கிய
அந்த முதல் நொடி...

ஆம்
வானம் என்ற தலைப்பில் நான்
எழுத தொடங்கிய அந்த முதல் நொடி...

மன்னிக்கவும் நான் கிறுக்க தொடங்கிய
அந்த முதல் நொடி!!!

அந்த நொடி...

என்னை நானே விமர்சனம் செய்ய தொடங்கினேன்

எனக்கு நானே எதிரியானேன்!
எனக்கு நானே தோழியானேன்!

என்னுள் நானே உணர்வாய்
என்னுள் நானே உயிராய்
என்னுள் நானே காதலாய்
என்னுள் நானே அந்நியமாய்

பிரவேசித்த அந்த முதல் நொடி...

என் பசுமையான பொக்கிஷங்களில்
முதல் பொக்கிஷமாய் அந்த நொடி என்னுள் இருக்கும்

நான் இறந்ததின் அடையாளமாய்
அந்த நொடி என்னுள் முதலில் இறந்து போகும்!

அந்த நொடியில் தான்

என் சிறகுகளை நானே
விரிக்க பழகி கொண்டேன்!

என் செதில்களை நானே
செதுக்க கற்று கொண்டேன்!

என்னுள் நான் பிரசவித்த
என்னுள் நான் பிரசவிக்கப்பட்ட

அந்த முதல் நொடி!!!

என்னுள் நான் நிகழ்த்திய மாற்றங்கள்
என்னுள் நான் உணர்ந்த மாற்றங்கள்

என்னுள் நான் கண்ட முதல் வெற்றி
எனக்கு நான் தந்த முதல் தோல்வி

என்னுள் நான் கண்ட முதல் சந்தோஷம்
எனக்குள் நான் பகிர்ந்த முதல் சோகம்...


பல பிரதிகள் தாண்டி
இன்னும் திருத்தப்படாமல்
இன்றும் நேசிக்கப்படும்...

என் மீது நான் கொண்ட காதலின்
என் மீது நான் கொண்ட நேசத்தின்
முதல் வெளிப்பாடு!!!

இன்றும் என் ஞாபக பெட்டகத்தின்
பொக்கிஷமாய்

என் ரகசிய பக்கங்களின்
முதல் ரகசியமாய்....

1 comment:

Unknown said...

Good one . .....................! :)