என்னுள் நானே பிரவேசிக்கிறேன்
என் கற்பனை உலகில் பிரயாணம் செய்கின்றேன்
பல நாளாய் என்னுள் உறங்கிக் கொண்டிருந்த
பல நாளாய் என்னுள் தொலைந்து போன
நான்
இன்று நானாய் பிறக்க தயாராகிறேன்.
என்னுள் எது மறைந்தது?
என்னை எது மறைத்தது?
விடை...
புரிந்தும் புரியாமல்
வாழ்வின் மாற்றம்...
அறிந்தும் அறியாமல்
என்னை நான் ஏமாற்றினேனா?
விதி ஏமாற்றியதா?
எது எப்படியோ...
இந்த மாற்றம்
இந்த தேடல்
இந்த வேகம்
என்னுள் நிகழ்ந்த
ஒரு நாள் மாற்றமா?
பல நாள் போராட்டமா?
எதுவாயினும்
இதோ என்னுள் நான் என்னை உணர
இன்னொரு உண்மை ...
2 comments:
super akka.... my be u had forgotten me.... this is abdul khadher immediate junior of urs and friend of chithra... (VAN MATE) i think nw u got me.... i couldnt reach out u thats y i amusing this as a media ... thnx to this technology for helping to reach such eminent personalities again... stay in touch .... awaiting for your reply....
hey thanks :)just read the comment and surprised to know how you found me :)
Post a Comment