என்னுடைய முதல் கிறுக்கல் இது.
என்னுடைய முதல் தேடலாய்
என்னுடைய முதல் பதிவேடாய்
என்னைப் பற்றிய சில வரிகள்...
நான் என்ற வார்த்தை
இப் பதிவேட்டில் அதிகம் பயன்பட்டிருக்கும்.
ஆம்
என்னை நான் தொலைத்து பல வருடங்களுக்குப் பிறகு
இன்று என்னுள் பிரவேசிக்கிறேன்
இன்று என்னுள் பிரயாணம் செய்கின்றேன் !
கவிதையை காதலாய் கொண்டவள் நான்
கற்பனையின் மேல் அளவில்லா மோகம் கொண்டவள் நான்
சுகமோ, சோகமோ
வெற்றியோ, தோல்வியோ
இன்பமோ, துன்பமோ
நட்போ, பகையோ
தமிழின் சுகத்தில் இளைப்பாருவேன்.
நான்
தமிழ் கற்றவள் அல்ல
தமிழ் பற்று உள்ளவள்.
பகுத்தறிவு சிந்தனையில் கூறுவதானால்...
தமிழ் மட்டுமே அறிந்தவள்!
தனிமையில் தமிழை துணையாக்கி
துன்பங்களை தூக்கி எரிந்தவள்
இப்படியாக...
நான் என்பவள் என்னை விட்டு
வெகு தூரம் சென்று விட்டேன்
தொலைந்து போன கால்ங்களுக்காக
என்னை நான் நொந்து கொள்ளவோ
இன்று என்னுள் நான் இல்லை !!!
தொலைந்த நான் தொலைந்தே போகாமல்
இன்று என்னை தேடி புறப்பட்ட காரணம்?
- அடுத்த பதிவேட்டில்...
2 comments:
It nice to described about your love towards to Tamil and u r humbleness....Happy writing....
hi i am rajkumar from chennai, u done neat and simple configuration, i like thanks do well, i hav sent a req in orkut 2, c u , mgrguy42ub@gmail.com
Post a Comment